https://www.vegetableclinic.in
VEGETABLECLINIC
https://www.vegetableclinic.in

Checking delivery availability...

background-sm
Search
Preview

This is your website preview.

Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

919994443517
Home All Pages எலுமிச்சை

எலுமிச்சை

நாளமில்லா சுரப்பிகள் என்றால் என்ன? 

 

 

நம் உடலில் சுரப்பிகள் ஹார்மோன்களை சீராக்குகின்றன. இந்த சுரப்பிகள் தன்னுடைய தன்மையில், சமநிலையில் மற்றும் இறுக்கமாக இருக்க வேண்டும். ஒரு பொருளை நாம் பாதுகாக்க உறைநிலையில் வைக்கின்றோம். நம் உடம்பில் சில உறைநிலை இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் ஒரு பொருளை வைத்தால் அது கெட்டு போகாமல் பத்திரமாக இருக்கும். நாம் உண்ணும் உணவில் உள்ள முக்கியமான ஊட்டசத்துக்கள் நம் உடம்பில் சேமித்து வைக்கும் இடத்திற்கு உறைநிலை இடங்கள் என்று பெயர். நம் உடம்பிற்கு எப்பொழுது தேவையோ அதை உடல் மீண்டும் எடுத்துக் கொள்ளும். நாளமில்லா சுரப்பிகள் தான் நமது உடலின் உறைநிலை இடங்கள். உதாரணமாக பிட்யூட்டரி,பீனில்,தைமஸ், அட்ரினல் போன்றவை நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளாகும்.

 

நாளமில்லா சுரப்பிகளின் பணி

 

 

  • இந்த சுரப்பிகள் எப்பொழுதும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். இந்த சுரப்பிகள் உடலில் மிக முக்கியமான பணியினை செய்கின்றன. இந்த சுரப்பிகளின் தன்மையை நாம் வேகப்படுத்தவும் கூடாது, குறைக்கவும் கூடாது. அது தன் இயல்பான நிலையில் இயங்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் அதை மாற்ற முனைந்தால் உடலில் தேவையில்லாத கோளாறுகள் ஏற்படும்.

 

 

  • நாளமில்லா சுரப்பிகள் நமது உடலை ஒட்டு மொத்தமாக கட்டுப்பாட்டில் வைக்கின்றது. ஹார்மோன் பாதிப்பினால் உடல் தனது கட்டுப்பாட்டை இழக்கும். ஹார்மோனில் பாதிப்பு ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட வேலையில் பாதிப்பு ஏற்படும். மனமும், உடலும் கட்டுப்பாட்டை இழக்கும். உடல் ஒரு வேலையை செய்யும், மனம் ஒரு வேலையை செய்யும். உடலையும், மனதினையும் ஒருங்கிணைப்பது தான் ஹார்மோன்கள். அதாவது உடலில் ஏற்படும் மாறுபாடு மனதினை பாதிக்கும். மனதில் ஏற்படும் பிரச்சனை உடலை பாதிக்கும்.

 

 

  • நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் முக்கியமான பணி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதை அப்படியே உடலில் வெளிப்படுத்தி உடலில் உபாதைகளாக காட்டும்.

 

மனதில் ஏற்பட்ட குழப்பம் உடலில் தாக்கம் ஏற்படாமல் இருக்க புடலங்காய்.

உடலில் ஏற்பட்ட ஒரு மாறுபாடு மனதினில் தாக்கம் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழம்.

 

 

  • உங்களுக்கு உடலா, மனமா எதனால் பிரச்சனை என்று வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்றால் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உடல் மனம் இரண்டு பிரச்சனைகளும் தீரும். எலுமிச்சை நமது மொத்த உடலையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். இது அவசர காலத்தில் ( ஐ.சி.யு ) போல் வேலை செய்யும். ஒருவருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாவிட்டால் அவரை காப்பாற்ற (மயக்கம்,வாந்தி, தலைசுற்றல், சுரம், வயிற்றுப்போக்கு ) ஒரு எலுமிச்சை பழத்தினை தோலுடன் அரைத்து குடித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். உடம்பில் அவசர காலத்தில் கால்சியம், இரும்பு சத்துக்கள் உடம்பில் வேலை செய்யும். எலுமிச்சை இதனை உடம்பில் இருந்து வெளிப்படுத்தி பிரச்சனைகளை சரி செய்து விடும். இது மிகப்பெரிய அதிசயம் செய்யும்.

 

 

  • அந்த காலத்தில் நடைப்பயணமாக செல்லும் போது வழியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கலாம் என்று எண்ணி எலுமிச்சை பழத்தினை உடன் எடுத்து செல்வார்கள். ஏதாவது உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை கடித்து சாப்பிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். போகும் வேலை தடையில்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் போய் சேர்வதற்காக எலுமிச்சையை பயன்படுத்தினர். எனவே எலுமிச்சை என்பது ஒரு எமர்ஜென்சி. இதை தோலுடன் சாப்பிடும்பொழுது எந்த பிரச்சனையானாலும் தீர்த்து விடும். இதில் முக்கியமானது தோல் தான். எனவே எலுமிச்சையை நம்பி நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். உங்களை மருத்துவமனைக்கு செல்லாமல் தடுக்கும் அற்புதமான சக்தி எலுமிச்சைக்கு உண்டு. மற்ற காய்கள் உடலினை உறுதி செய்ய சாப்பிடலாம். ஆனால் அவசர காலத்திற்கு எலுமிச்சை முக்கியமானது.

 

 

  • திடீர், திடீர், என்று ஏற்படும் நிகழ்வுகள் அதாவது ஒரு சிலருக்கு திடீரென்று கண் தெரியாது, காது கேட்காது. அதாவது எதிர்பாராமல் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றத்திற்குஎலுமிச்சை பயன்படும்.

 

 

  • நாம் உண்ணும் உணவின் சக்தி ஹார்மோனில் சென்று அடைவதற்கு எலுமிச்சை சாப்பிட வேண்டும்.

 

 

  • நாம் உண்ட உணவின் சக்தி எலும்பு, எலும்பு மஜ்ஜையில் சென்று அடைவதற்கு கொப்பரை தேங்காய் சாப்பிட வேண்டும்.

 

 

  • இப்பொழுது நாம் ஹார்மோன் வளர்ச்சிக்காக கொடுக்கும் மருந்துகளால் ஹார்மோனில் சமநிலை ஏற்படுத்த முடியவில்லை. ஹார்மோனின் சமநிலைக்கு எலுமிச்சை தோல். எலுமிச்சையின் முழுமையான சத்து அதன் தோலில் தான் அடங்கியுள்ளது. ஆனால் நாம் ஜுஸை குடித்து விட்டு தோலை எறிந்து விடுகின்றோம். நாம் ஜுஸ் குடிக்கும் பொழுது 10ல் 1 பங்கு தான் பலன் கிடைக்கும்.

 

 

  • இந்த சுரப்பிகளின் சமசீரற்ற நிலைக்கு முக்கிய காரணங்கள் நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும், நமது மனதை கடுமையாக வருத்தும் பொழுதும் இந்த சமசீரற்ற நிலை ஏற்படும். எலுமிச்சையால் ஏற்படும் பயன்கள்

 

 

  • குடலில் ஹார்மோன் மாற்றத்தினால் செரிமானம் பாதிப்பாகி வாந்தி எடுத்தால் தான் தலைவலி போகும் என்ற நிலைக்கு எலுமிச்சை உதவி புரியும்.

 

 

எலுமிச்சை தோலின் பயன்கள்

 

 

  • நரம்பு .. திடீரென்று ஏற்படும் தலைசுற்றல்

 

  • கண் .. திடீரென்று பார்வை இழப்பு

 

 

  • காது .. திடீரென்று செவித்திறன் குறைவு. காதுவலி.

 

 

  • தேவையில்லாத இடங்களில் தசை வளர்ச்சி, மூக்கில் தசை வளர்தல், குடலில் தசை வளர்தல்தேவையான இடத்தில் தசை வளராமல் தேவையில்லாத இடத்தில் தசை வளரும். நம் நிலையில் எங்கோ தடுமாறி நமது செயல்கள் வேறு மாதிரியாக இருக்கும். எது அவசியம், எது அனாவசியம் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால் தேவையில்லாத இடங்களில் தசை வளரும். தொண்டை வலி ஏற்படும்.

 

தொண்டை அடைப்பிற்கு .. கோவைக்காய்

தொண்டை வீக்கத்திற்கு .. கொத்தவரங்காய்

தொண்டை வலிக்கு .. எலுமிச்சை

 

 

இந்த மூன்றும் சேர்ந்து எடுக்கும் பொழுது தொண்டை அனைத்து பிரச்சனைகள், டான்சில் சரியாகும்.

 

 

  • அமர்ந்தால் மூச்சு திணறல் ஏற்படும். அவர்களால் உட்கார முடியாது. படுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் ஒரு மயக்க நிலையில் இருப்பார்கள். அவர்களால் உட்கார முடியாது.

 

சிலரால் படுக்க முடியாது. மூச்சு திணறல் ஏற்படும். உட்கார்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு புடலங்காய்.

 

 

  • செரிமானமின்மையால் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது. 1 சொட்டு தண்ணீர் குடித்தால் கூட வாந்தி ஏற்படும். திடீரென்று ஏற்படும் வயிற்று போக்கு.

 

 

  • சிறுநீரில் தேவையற்ற துகள்கள் அழுக்காக வெளியேறும்.

 

 

  • தோலில் சுருக்கம் ஏற்பட்டு வயதோதிக தன்மையை ஏற்படுத்தும் என்றும் இளமையாய் இருக்க எலுமிச்சை, வாழைக்காய்.

 

குணம் : பொறுமை

 

 

நோய் உருவாக முக்கிய காரணம் நமது எண்ணங்கள். குணங்கள் தான் ஆரோக்கியம். அவகுணங்கள் உடலில் நோயினை உருவாக்கும். அந்த குணங்களை மேம்படுத்துவதற்காகத் தான் விரதம் இருத்தல், பத்திய சாப்பாடு சாப்பிடுதல், காவடி எடுத்தல் போன்றவை நமது குணத்தை மேம்படுத்துவதற்காக பக்தி மார்க்கத்தில் கையாண்ட எளிய வழிமுறைகளாகும். இது மனிதனின் மனதையும், உடலையும் சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. நாம் அரிய பொக்கிஷங்களை இந்த பூமியிலிருந்து பெற வேண்டும் என்றால் பொறுமை வேண்டும்.

 

 

நமது உடலின் ஹார்மோன்களின் சமநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம், இயற்கையானாலும் சரி நமது வாழ்க்கையானாலும் சரி நாம் ஒரு காலத்தை நிர்ணயம் செய்கின்றோம். நாம் ஒரு விதையை போட்டால் ஆறு மாதத்தில் பலன் வர வேண்டும் என்றால் நாம் அதை மூன்று மாதத்தில் எதிர்பார்க்கின்றோம். எனவே நாம் உண்மையான காலநிலையினை உடைத்து நமக்கு வேண்டிய காலத்தில் பயன்படுமாறு செய்ய நிர்ப்பந்தம் பண்ணுகின்றோம். அதனால் தான் நமக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பயிர் இயற்கையாக தானாகவே வளர்ந்து பயன் தரும். ஆனால் நாம் பொறுமையின்மை காரணமாக முன்னதாக பெற முயற்சிப்பது தவறு.

 

 

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமயத்தில் வெற்றி கிடைக்கும். ஒருவருக்கு முன்னதாக வரலாம். ஒருவருக்கு நடுவில் வரலாம். சிலருக்கு இறுதியில் வரலாம். உற்பத்தி செய்யும் பொருளை போல ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக வரமுடியாது.

 

 

எனவே தேவையில்லாமல் மனதினை பதட்டப்படுத்தி அவசரப்படுத்துவதால் தான் ஹார்மோன்கள் சமநிலை இழந்து விடுகின்றது. நாம் ஓட்டும் வாகனம் அதிக வேகத்தில் ஓட்டும் பொழுது கட்டுப்படுத்த முடியாது. சீரான வேகத்தில் செல்லும் போது எளிமையாக கட்டுப்படுத்த முடியும். அதுபோல் எப்பொழுது நமது எண்ணங்கள் மிகத் தீவிரமான நிலையில் போகும் போது நமது ஹார்மோன் சமநிலையை இழக்கும்.

 

 

நமது ஹார்மோனின் சமநிலை இழப்பிற்கு ஒரு முக்கியமான காரணம் நமது தொலைகாட்சி பெட்டியாகும். நமது வாழ்வியலுக்கு பொருந்தாத ஒரு நிகழ்வைக் காட்டி மனதினை கலைத்து யதார்த்தம் இல்லாத வாழ்க்கையை வாழ வைக்கிறது. அவசரப்படுத்துகின்றது. இது நமது ஹார்மோனின் சமநிலை மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

 

 

ஒருவரின் மனநிலையை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. உதாரணமாக நமது இன்றைய பெண்களின் தற்போதைய நிலை மாதவிலக்கு வருவதற்கு ஒரு மாத்திரை, வராமல் இருக்க ஒரு மாத்திரை, தேவைப்பட்டால் தள்ளி போட ஒரு மாத்திரை, நன்றாக வராததற்கு ஒரு மாத்திரை போட்டு உடலை ஒரு இயந்திரமாக மாற்றி வருகிறார்கள்.

 

 

அந்தக் காலத்திலும் பெண்களுக்கு மாதவிலக்கு வந்தது தான். அவர்கள் அதை எப்படி கையாண்டார்கள். இந்த மாதம் பூஜை இருக்கின்றது, மனதில் வைராக்கியம் வைத்தால் அது வராது. மனோபலம் இருந்தது. அந்த மனோபலத்தால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அந்தளவிற்கு ஆற்றலுடன் இருந்தார்கள். இப்பொழுது தொட்டதற்கெல்லாம் மாத்திரை சாப்பிடும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள். அப்படியானால் நம்மிடம் ஒன்றுமேயில்லை. நமது எண்ணத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம், யார் வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். நமக்கு என்று எந்த தடுப்பும் இல்லை.

 

 

நமக்கு உடலில் உள்ள ஏழு விதமான சுரப்பிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வேண்டும். தைமாதத்தில் ரத சப்தமி என்ற விழா கொண்டாடப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரை சூரியன் ஓட்டுவது போல் சித்தரிக்கப்படுகிறது.

 

 

எனவே சுரப்பிகளை நிர்வாகம் செய்ய பொறுமை வேண்டும். நிதானம் வேண்டும்.

 

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை

இகழ்வாரைப் பொருத்தல் தலை.

 

 

எனவே நமக்குப் பொறுமை வேண்டும். இல்லையெனில் நாம் தொந்தரவு மற்றும் மாற்றத்திற்கு தூண்டப்படுவோம். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். எனவே நாம் நாளமில்லா சுரப்பிகளை நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கு தொலைகாட்சி பெட்டியை தவிர்த்தால் நல்லது. நமக்கு மனநிம்மதி தான் முக்கியம். தேவையில்லாத தகவல்கள் நமக்கு பயன்படாது. ஆக்க பூர்வமாக வேலை செய்ய வேண்டும். அதிகமான தகவல்களை தெரிந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை. நம்மால் எதை செய்ய முடியுமோ அதை தான் நாம் செய்ய முடியும். செய்யவே முடியாத ஒரு விஷயத்தை பற்றி யோசனை செய்வதில் எந்த நன்மையும் இல்லை.

 

 

தொலைக்காட்சி மூலம் தவறாக பார்க்கப்படும், கேட்கப்படும் நிகழ்ச்சிகளால் தவறான எண்ணங்களை பரப்பினால் அந்த வீட்டில் எப்படி நல்லது நடக்கும். எல்லாவிதமான அசம்பாவிதங்கள் நடப்பதற்கும் நாம் நம்மை தயார்படுத்தி கொள்கிறோம்.

 

 

எப்படி பச்சைமிளகாய் வயிற்றுக்குள் சென்று உடலை பாதிப்பிற்குள்ளாகிறதோ, அதே போன்று தொலைக்காட்சி பெட்டி பார்வையாலே நம்மை பாதிப்பிற்குள்ளாக்குகின்றது. இது எந்தளவிற்கு ஒரு மனிதனை பாதிப்பிற்குள்ளாக்குகிறது என்றால் நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய அவனுடைய எந்தவிதமான யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாறுகின்றான். தொலைக்காட்சியில் பார்ப்பதை எல்லாம் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து விடுகின்றான்.

 

 

தொலைக்காட்சியின் விளைவு ஹார்மோன் வரை பாதிப்புகளை உருவாக்குகிறது. அடுத்ததாக தற்பொழுது வரும் குழந்தைகள் தான் தோன்றிதனமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்ப்பமான ஒரு பெண் தொலைக்காட்சியில் வரும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் பார்க்கும் பொழுது அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படியிருக்கும். நமது புலன்களுக்கு தேவையில்லாமல் இவ்வளவு விஷயங்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வியல் தவறாக இருந்தால் நோயை குணப்படுத்துவது கடினம்.

 

 

சாப்பிட்ட உணவு சீரணிப்பது சேர்த்து, மற்ற விஷயங்களையும் சீரணிக்கப்பட வேண்டும். அது தேவையில்லாமல் எண்ணங்களை உற்பத்தி பண்ணுகிறது. எனவே எதிர்காலத்தில் என்ன மாதிரி வேண்டுமானாலும், ஜீன் , ஹார்மோனில் மாற்றம் வரலாம். இதற்கு முக்கியமான பெரிய பொறுப்பு தொலைக்காட்சி பெட்டிக்கு உண்டு. தொலைக்காட்சி பெட்டி நமது மனதில் ஒரு களங்கத்தை, ஒரு நெருடலை ஒரு கசப்புத் தன்மையை தேவையில்லாத அதிர்வுகளை தேவையில்லாத எண்ணங்களை தறிகெட்டு ஓட விடுகின்றது.

 

 

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு கொடி மரம் இருக்கும். மூன்று வித உலகங்கள் இருக்கின்றது. அவை

 

 

1. பொருள் நிறைந்த உலகம்

2. சூட்சம உலகம்

3. ஆன்ம உலகம்

 

 

நாம் இருப்பது ஸ்தூலமான பொருள் உலகம். நம் ஆன்மா எங்கிருந்து வந்ததோ அந்த ஆத்ம உலகத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆத்ம உலகத்திற்கு செல்லும் இடம் அமைதியானது. அது வெட்டவெளி என்றும், அமைதி உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. அமைதி உலகம் தான் ஆன்மாவிற்கு சக்தி.

 

 

நாம் யாரும் இந்த தேசத்து மக்கள் இல்லை. நாம் அனைவரும் ஆன்ம தேசத்திலிருந்து பூமிக்கு வந்து இருக்கின்றோம். மீண்டும் ஆன்மலோகத்திற்கு திரும்பி செல்வோம் என்ற கருத்தை நிலைநாட்டும் அடையாளம் தான் கொடிமரம்.

 

 

இங்கு நடப்பவை எல்லாம் ஆன்மாவில் பதியும். எனவே அந்த பதிவுகளை என்றுமே ஒட்டாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆத்மதேசம் நம் நினைவில் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். இது நம் தேசம் இல்லை. இந்த தேகமே நமக்கு கிடையாது என்னும் போது யாரிடம் போய் என்ன உரிமை கேட்பீர்கள். நாம் அனைவரும் ஒரு பொழுது போக்கிற்காக வந்துள்ளோம். எனவே வாழ்க்கை என்பது ஒரு பொழுதுபோக்கு. அந்த பொழுதுபோக்கை இவ்வளவு விபரீதமாக,கடினமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, அதில் நியாயமும் இல்லை. அந்த அமைதி நிலையில் இருக்கும் பொழுது எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். அமைதி சாந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆன்மாவின் உண்மையான தர்மம் சாந்தி. ஆன்மா அமைதியை விரும்புகிறது. அந்த அமைதியை கலைக்கக்கூடாது. அமைதியை கலைத்தால் கூடு உடைந்து விடும். மனிதத் தன்மையை இழந்து விடுவோம்.


  • 2019-07-25T03:04:42
  • 0

Other Pages

View All Pages
remediesHome எலுமிச்சை